பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனு கையளிக்கும் பணிகள் நுவரெலியாவில் ஆரம்பம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பன தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் இன்றையதினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சுயேட்சைக் குழுவொன்று தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 08 சுயேச்சைக் குழுக்கள் கட்டுபணத்தை வைப்பிலிட்டுள்ளதாக மாவட்டத்தின் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 04ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பமாகியது வார விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை (07) காலை 8.00 மணிக்கு மீண்டும் வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அலுவலக நாட்களில் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.