இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO)

Sri Lankan protests Sri Lanka Fuel Crisis
By Jenitha Jul 04, 2022 06:47 PM GMT
Report

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை

போதியளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் எரிபொருளினை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்து ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாளிகா சந்தியில் பதாதைகளை ஏந்திக்கொண்டு இன்று (04) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

“நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக தொழில் புரிந்து வருகிறோம். தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் (பெட்ரோல்) தட்டுப்பாடு காரணமாக எங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வருமானமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

எங்களது குடும்பங்கள் அன்றாட தொழிலையே நம்பி வாழ்க்கைச் செலவை கொண்டு செல்கின்றார்கள் . மேற்படி பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக எங்கள் தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாது உள்ளதுடன் பெரும் சிரமத்திற்குள்ளாகி காணப்படுகின்றன.

எரிபொருள் கிடைப்பதும் இல்லை

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசைகளில் நின்ற போதிலும் சிலவேளைகளில் எரிபொருள் கிடைப்பதும் இல்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு எங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள பொருத்தமான முறை ஒன்றினை செய்து தருமாறும் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

மகஜர் கையளிப்பு

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம். சம்சுதீன் ஆகியோரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதன்போது, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பாட்டகாரர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செய்தி- முபாரக்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கடுமையான நோயாளர்களுக்கும் துரித கதியில் பெட்ரோல் வழங்கப்படுவதாக இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எம்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

சீரான முறையில் எரிபொருள் விநியோகம்


நாடு முழுவதிலும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றபோதிலும் மட்டக்களப்பு லங்கா ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி எரிபொருள் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகின்றது.

இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய அதிபர் எம்.செல்வராசாவின் வழிநடத்தலில் மிகவும் நேர்த்தியாக இன்று காலை முதல் பெட்ரோல் விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

செய்தி-ருசாத்

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி சங்கங்கள் தங்களுக்கு பெட்ரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரண்டு பிரதேச செயலகங்களிலும் தங்களது மகஜர்களை இன்று கையளித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுவதை தங்களது வாழ்வாதரமாக கொண்ட ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளதாகவும் தங்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கு பெட்ரோல் கிடைக்காதது மிகவும் சிரமமாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

தமது பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வரும் போது தமக்கு முன்னுரிமை பெற்றுத்தருமாறு கோரிக்கையை மகஜராக இரண்டு பிரதேச செயலகங்ளிலும் கையளித்துள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான மகஜரினை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மிலிடமும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான மகஜரினை பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத்திடமும் கையளித்துள்ளனர்.

பிரதேச செயலகங்களில் கையளிக்கப்பட்ட மகஜர்களுள் மாவட்ட செயலாளருக்கான பிரதியும் வழங்கப்பட்டது. ஓட்டமாவடி ஆட்டோ சாரதிகள் சங்கம், கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கம், மீறாவோடை பதுரியா மாஞ்சோலை ஆட்டோ சாரதிகள் கூட்டுறவு சங்கள் இணைந்து இந்த மகஜர்களை கையளித்தன.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

இந்த கோரிக்கை மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு தங்களுக்கான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று இரண்டு பிரதேச செயலகங்களிலும் மகஜர்களை பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகஜர்களை கையளிக்கும் நிகழ்வில் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், ஆட்டோ சாரதிக் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி- நவோஜ்

மூதூர் 

எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டியும், இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை மூன்று மணி நேரமாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, பணிமனை உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் போன்றோருக்கு இதுவரை அத்தியவசிய சேவையடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விநியோகத்தினை சீராக முன்னெடுக்க வழிகாட்ட வேண்டிய பிரதேச செயலாளர் இராணுவத்தினரின் செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதனால் மக்கள் தமது அன்றாட அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் திணறுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது,போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மட்டும் இன்று மாலை மூன்று லீட்டர் வீதம் எரிபொருள் வழங்க Ioc எரிபொருள் நிலையம் நடவடிக்கை எடுத்தது என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

செய்தி- எரிமலை

மட்டக்களப்பு

மட்டக்களப்பு ஊறணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து தினங்களாக எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு தமதுக்கு கடந்த ஐந்து தினங்களாக வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன்போது அங்கு வருகைதந்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை சோதனையிட்டனர்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

எனினும் அங்கு எந்த எரிபொருளும் இருக்காமை உறுதிப்படுத்தப்பட்டதுடன் எரிபொருள் நிரப்பு நிலையமும் சோதனையிடப்பட்டதுடன் அங்கும் எந்தவித எரிபொருளும் கைப்பற்றப்படாத நிலையில் அது தொடர்பில் அங்கு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

தாங்கள் ஐந்து தினங்களாக வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்தபோதிலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

எனினும் தமது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருட்கள் அனைவருக்கும் பகிரப்பட்டதாகவும் தாங்கள் எந்தவித ஏமாற்றத்தினையும் செய்யவில்லையெனவும் எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

செய்தி-குமார்

கந்தளாய்

கந்தளாயில் தமக்கு பெட்ரோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் இன்று(4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு எரிபொருள் நிரப்புமாறு கோரி இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய எரிபொருள் நிரப்பமுடியாது என தெரித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இராணுவத்தினருக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை பௌத்த துறவி மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பியுள்ளனர். வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

செய்தி- முபாரக் 

யாழ்ப்பாணம்

எரிபொருள் கறுப்பு சந்தையை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கைவிரித்துள்ளார்.

“யாழில் ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தாம் எரிபொருள் வழங்குவோம்” என அறிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ். மாவட்டடத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாழில் ஐ.ஓ.சி நிறுவனம் பொது மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என ஊடக சந்திப்பு நடத்தியதாக அறிகிறேன். அவர்கள் தமது எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு எவ்விதமான எழுத்து மூலமாக அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை.

வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருள் வழங்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுக்குமானால் முறையான ஒரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

அவ்வாறில்லாமல் வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருளை வழங்கும் போது அருகில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெறக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் நிலையில் கறுப்புச் சந்தையை கட்டுப்படுத்த முடியாது போகும்.

ஆகவே எரிபொருள் விநியோகத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் மட்டும் தனித்து செயற்படுத்தி விட முடியாத நிலையில் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்” என தெரிவித்தார்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

மேலும், இனிவரும் காலங்களில் யாழ். மாவட்ட செயலகத்தினதும் இராணுவத்தினதும் உத்தரவுகளை கேட்க மாட்டோம் மக்களுக்கே எரிபொருளை விநியோகிப்போம் என யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது யாழ். மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ். மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பொதுமக்களுக்கு 72 % எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28% எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதில் 6600 லீட்டர் கொள்கலன் கொள்வனவு உள்ள பவுசரில் 1250 மோட்டார் சைக்கிளுக்கும், 500 முச்சக்கரவண்டிகள்,கார்,உள்ளிட்ட வாகனங்களுக்கு பொதுப்பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களும், அரசசேவை ஈடுபடும் அத்தியாவசியசேவையில் உள்ளவர்களில் 600 மோட்டார் சைக்கிள்களும், 50 கார் வாகனங்களும் பெட்ரோல் பகிர்தளிக்கப்படும் என யாழ். மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி- இடைவிடாது போராடும் மக்கள் (VIDEO) | Sri Lanka Fuel Crisis Three Wheeler Drivers

செய்தி-தீபன் மற்றும் கஜிந்திரன்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US