வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது!
முல்லைத்தீவு- செம்மலை பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

இச் சுற்றிவளைப்பின் போது, வீட்டில் இருந்த 45 லிட்டர் டீசல், 21 லிட்டர் பெட்ரோல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
| சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு:அனுரகுமார திஸாநாயக்க |
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam