எரிபொருள் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சில் இன்று (03) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார்.
Reviewed the Fuel requirements for the months of September & October, cargo plans, confirmed cargos & the finances needed to secure the cargo with the CPC Commercial & Finance management this morning. Refinery requirements of Crude oil was also discussed for the next 2 months. pic.twitter.com/1U0CR2gcIZ
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 3, 2022
கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்
இந்த பதிவில், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவை, போக்குவரத்து திட்டங்கள், எரிபொருள் இருப்புகளை பெறுவதற்கான நிதி வசதிகள் தொடர்பில் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.