அமைச்சர் கஞ்சன பொய் கூறுகிறாரா..
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எரிபொருள் கையிருப்பில் இருக்கின்றது என கூறினாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கஞ்சன பொய் கூறுகிறாரா..?
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. போதிய எரிபொருள் கைவசம் உள்ளது என எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் அறிவித்தாலும் நடைமுறையில் எரிபொருள் கிடைப்பதில்லை.
எரிபொருள் இருப்புக்களுக்கு முன்பதிவு செய்த போதிலும் உரிய கையிருப்பு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.