கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்டு பெருந்தொகை பணத்தினை பறிகொடுத்த பொதுமக்கள்
கிளிநொச்சியில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
| இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! வாகன இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் |
டீசலுக்கு பதிலாக தண்ணீர்

கனகாம்பிகை குளத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு டீசல் வாங்கிய நபருக்கு
டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில் பணத்துடன் திருடர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.
இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து தினசரி பொதுமக்கள்
ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri