களுத்துறையில் அமைதியின்மை! இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்
களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடரும் துப்பாக்கி பிரயோகம்
நாட்டில் தொடரும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வரும் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.இதனை கட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் சம்பவங்களும் அதிகளவு பதிவாகி வருகின்றது.