நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்! வெளியான தகவல்
நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்
அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

மேலும், மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளை செலுத்தாவிட்டால், மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை உருவாகியுள்ளது.
பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam