ஹட்டனில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை(video)
ஹட்டன் நகரில் எம்.ஆர். நகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 3 நாட்களுக்கு பின்னர் இன்றைய தினமே பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை முதல் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரவு பகலாக காத்திருந்த பொதுமக்கள்
பெட்ரோலை பெறுவதற்கு பலர் இரவு - பகலாக வரிசைகளில் காத்திருந்த நிலையில், இன்று திடீரென வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் வரிசைக்குள் புகுந்து பெட்ரோல் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர். இதனால் வரிசைகளில் காத்திருந்தவர்கள் கடுப்பானார்கள்.
திடீரென வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை ஏற்பட்டது. எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயமும் ஏற்பட்டது.
எனினும், பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
பின்னர் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.













பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
