மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்றைய தினம் (6) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
வழக்கு விசாரணை
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் பிரதேச சபை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமையினால் மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையிலே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளது. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டாக இணைந்து போட்டியிடுவதனால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri
