சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம்!..தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அதிகாரம் தற்போது யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும்18ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நிமல் சிறிபால டி சில்வா (Nimala Siripala De Silva) தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக் கூட்டத்தைக் கூட்டி பதில் தலைவர், பதில் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.
மைத்திரி தரப்பு விளக்கம்
இந்தக் கூட்டத்தில் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மேற்படி கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் (Chandrika Kumaratunga) பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே, கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனத்தின் செல்லுபடி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாகத் தொடர்புகொள்ள வேண்டிய கட்சியின் தரப்பு என்பன தொடர்பில் ஆராயத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam