இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்
மாத்தளையில் மோசடியான முறையில் பழைய தட்டு ஒன்று பல மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புராதனகால பெறுமதி மிக்கதாக கூறி பழைய தட்டு ஒன்றை 25 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த மோசடி செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மாத்தளை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் சார்ஜன்ட்
வெலம்படை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தட்டை ஒருவருக்கு தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.