சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம்(1) புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
47 பேர்
இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீ விபத்து
படுகாயம் அடைந்த 100ற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan