தையிட்டி போராட்டம் - விகாராதிபதி முடிவு எடுப்பவராக இருந்தால் அரசாங்கம் எதற்கு..! மக்கள் விசனம்
எவ்வளவு தடைகள் வந்தாலும் அச்சுறுதல்கள் வந்தாலும்,கைதுகள், உடல் உபாதைகள் வந்தாலும், எங்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என்று நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள், தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்றையதினம் (3) நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
இன்றையதினம் காலையில் நாங்கள் வரும்போதும் பொலிஸார் புதிதாக சோதனை சாவடிகளை உருவாக்கியுள்ளனர்.
அதில் எங்களுடைய பதிவுகளை மேற்கொண்டு அச்சுறுத்தலையும் காலதாமத்தையும் ஏற்படுத்தினர்.
எங்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் என்ற போர்வையில் பாதுகாப்பை இல்லாமலாக்கும் வேலையை தான் இலங்கை அரசாங்கமும், அரச இயந்திரங்களும் முன்னெடுகின்றன.
மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam