பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து கலந்துரையாடிய அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(19.2.2026) புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
கூட்டு நடவடிக்கைகள்
அத்தோடு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பிரான்ஸின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது, இலங்கையின் தற்போதைய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிரான்ஸின் ஆதரவு மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், ஐரோப்பிய வல்லரசு ஒன்றின் தலைவருடன் இடம்பெற்ற மிக முக்கியமான சந்திப்பாக இது பார்க்கப்படுகின்றது.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் புதிய அரசின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகளும் உடனிருந்தனர்.
மேலதிக தகவல்- ராகேஷ்
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam