அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலை குறையக்கூடும்
உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மானிய முறையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவு வகைகளின் விலையும் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் மதிய உணவுப் பொதி, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை மற்றும் நீர்க்கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri