பயிர் செய்கைக்கு வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் மக்கள் கோரிக்கை (Photos)
கஞ்சி குடித்தாவது பசியைப் போக்க பயிர் செய்கைக்கு வழிவிடுமாறு வனவளத் திணைக்களத்திடம் வவுனியா வடக்கு காஞ்சிரமோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமங்களில் ஒன்றான காஞ்சிரமோட்டை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான பயிற்செய்கையை மேற்கொள்ள வனவளத் திணைக்களத்தினர் தடை விதிப்பதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்
யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 - 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறியுள்ளனர்.
அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர்.
தோட்டம் செய்கை மற்றும் நெற் செய்கை
அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்டம் செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்ரைற மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிற் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் உழுத நிலங்களில் கூட பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
கிராமிய அபிவிருத்தி தொடர்பான மாவட்ட மட்டத்தில் அமைச்சர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற அரச கூட்டங்களிலும், அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் குறித்த காணிகள் அங்கு வாழும் மக்களுக்கு பயிற்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதும், வனவளத் திணைக்களத்தினர் பயிற் செய்கையில் ஈடுபட தொடர்ந்தும் தடை ஏற்படுத்துகின்றனர்.
நாம் வியாபாரத்திற்காக பயிர் செய்யவில்லை. எமது நாளாந்த வயிற்றுப் பசிக்காகவே பயிர் செய்கின்றோம். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாம் ஒரு நேரம் கஞ்சி குடிக்க என்றாலும் அரச அதிகாரிகளும், மக்கள் பிரதி நிதிகளும் எமது நிலத்தை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தும் தமக்கான தீர்வு
கிடைக்கவில்லை எனவும் அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
