தனது அரிசி ஆலைக்கு நேரில் வருமாறு வர்த்தக அமைச்சருக்கு அழைப்பு விடுக்கும் மித்ரபால
தமது நிறுவனத்தின் அரிசி உற்பத்தி நிலையங்களை நேரில் பார்வையிடுமாறு, நியூ ரத்ன அரிசி ஆலையின் உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு(Wasantha Samarasinghe) அழைப்பு விடுத்துள்ளார்.
ரத்ன அரிசி ஆலை உட்பட்ட ஆலைகள்கள், பாரிய அரிசி தொகையை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்திருந்ததை அடுத்தே மித்ரபால, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மித்ரபால, “தனது நிறுவனத்தை எந்த நேரத்திலும் ஆய்வு செய்யுமாறு,வர்த்தக அமைச்சரை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சந்தை விநியோகம்
தாம் சந்தைக்கு வெளியிட்ட அரிசியின் அளவு, உற்பத்தித் திறன் மற்றும் தன்னிடம் உள்ள கையிருப்பு ஆகியவற்றை தன்னால் நிரூபிக்க முடியும்.
அத்துடன் அடுத்த அறுவடைப் பருவம் வரையில் நிலையான சந்தை விநியோகத்தை உறுதி செய்வதற்காக அரிசி இருப்புகளை பராமரிப்பது முக்கியம் என்றும் அவர் விளக்கினார்.
அனைத்து அரிசி கையிருப்புகளையும் ஒரே நேரத்தில் சந்தைக்கு வெளியிடுவதில்லை.
இதன்படி, தன்னிடம் உள்ள அரிசியை பாதுகாத்து, பெப்ரவரி 1ம் திகதி வரை உற்பத்தியைத் தொடர வேண்டும் என்றும் மித்ரபால குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
