63 நாட்களாக கடலில் மாயமான இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் மீட்பு
கடந்த 2022 செப்டம்பர் 25 ஆம் திகதி, தொழிலுக்கு சென்ற நான்கு இலங்கை கடற்றொழிலாளர்கள், தங்களது தொடர்பை இழந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர்கள் மீன் பிடிப்பதற்காக எஃப்.வி. நீல் மேரி என்ற படகில் கிழக்கு திசை நோக்கிப் பயணித்தபோதே தொடர்பை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு
இந்தநிலையில் இறுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அடைந்துள்ளனர்.
அங்கு இந்திய கடலோர காவல்படை அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளித்து அவர்களை இந்திய கடற்கரைக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் கடற்றொழிலாளர்கள்
அவர்கள் தப்போது இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதை விரைவுபடுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த
செய்தியால் 63 நாட்களாக கடலில் மாயமான இலங்கை கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர்
மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.