சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணை விவகாரம்: இருவர் கைது (video)
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி
இலவன் குடா கடற்பரப்பில் சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணைகளை அகற்றுமாறு
தெரிவித்து 55 வது நாளாக கவனயீர்பபு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இருவரை ஜெயபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் எந்தவித அறிவித்தலும் இல்லாதும், பிடியாணை இன்றியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இது தொடர்பாக போராட்டத்தில் மக்கள் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
70 வயதுடைய மடுதீன் பத்திநாதன் மற்றும் 49 வயதுடைய கந்தையா மகேந்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

