இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில்: கடற்றொழிலாளர்கள் விசனம்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடலட்டைத் தொழில்நுட்பம் வடக்கில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பம்
"எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தினை கொண்டு வருவதனை வடக்கு கடற்றொழிலாளர்கள் விரும்பவில்லை.
அத்துடன் இந்த செய்தியினால் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவரை இதனை முற்று முழுதாக தடுத்து நிறுத்துமாறும் யாழ். கடற்தொழிற்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
கடலட்டை தொழில்நுட்பம்
அதேபோல் இந்தியாவில் கடலட்டை தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த வாரம் மன்னார் ஓலைத்தடுவாயில் அமைந்துள்ள கடலட்டை உற்பத்தி நிலையத்திற்கு இந்திய முதலீட்டாளர் வருகை தந்து அந்த தொழில்நுட்பத்தை முதலீடு செய்ய இருப்பதாக அறியும் செய்தி எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
இதனை வடக்கு கடற்தொழிலாளர்கள் விரும்பவில்லை. வடக்கில் இந்த கடலட்டை தொழிநுட்பத்தை கொண்டு வந்து வடக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டினை இந்திய அரசாங்கம் செய்யக்கூடாது என்ற செய்தியை இந்திய அரசாங்கத்துக்கு சொல்லவதோடு, யாழ். மாவட்டத்தில் இந்த கடலட்டை தொடர்பான பிரச்சினை நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன இதனை கருத்தில் கொண்டு கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் . ஏனைய கடல்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு சார் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி
அத்துடன், தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல் நெடுந்தீவு அனலைதீவு போன்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17.10.2022) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகவும், நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், இலங்கைக் கடற்படையினர், இந்திய துணைத்தூதரகம் ஆகியோர் வடபகுதி கடலுக்குள் அத்துமீறி இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலதிக செய்தி:தீபன்
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)