இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை! எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள்
எச்சரிக்கை விடுக்கும் ஐக்கிய நாடுகள்
இலங்கை முழுமையான மனிதாபிமான அவசரநிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் 163 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2,700 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய அறுவை சிகிச்சை மற்றும் 250 க்கும் மேற்பட்ட வழக்கமான ஆய்வக பொருட்களும் கையிருப்பில் இல்லை.
மின்சாரம், எரிபொருள் இல்லை
மின்சார விநியோக தடை மற்றும் மின்பிறப்பாக்கிகளை இயக்க எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, பல மருத்துவமனைகள் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டியேற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதாரக் குழப்பம் முழு மனிதாபிமான அவசரநிலையாக மாறக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.