ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம்! எரிபொருள் விலை உயர்வினால் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி
இலங்கையில் எரிபொருள் விலைகளை நிலையாகப் பேணுவதற்கு, அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எரிபொருள் விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கும் தொழில்துறையினருக்கும் சுமையைக் குறைக்க வரிகளைக் குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
| QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/ |
ஏமனுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து
வரி குறைப்பை ஒரு மானியமாகப் பயன்படுத்தி, போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதைத் தடுத்து, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் ஏமனுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் நிலவும் பதற்றங்கள் குறித்து அவர் எச்சரித்தார்.
"ஏமனுக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையிலான கடல் பாதை வழியாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 12% கொண்டு செல்லப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் இந்தப் பாதை ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டால், உலக எண்ணெய் போக்குவரத்தில் 35% வரை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இது இலங்கையைப் போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்குப் பாரிய நெருக்கடியை உண்டாக்கும்." என குறிப்பிட்டார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri