ரூபா வர்த்தகத்தை நிறுவுதல் தொடர்பில் இலங்கை - இந்தியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் நேற்றையதினம் (22.04.2023 ) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டதாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ரூபாய் வர்த்தகத்தை நிறுவுதல்
இந்த சூழலில், இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான வழிமுறையாக ரூபாய் வர்த்தகத்தை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மற்றும் ஆடைத் துறையில் இருதரப்பு ஒருங்கிணைப்புக்கான செயற்திட்டங்கள் குறித்து ஆரயப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சியில் வகிக்கக்கூடிய முக்கிய
பங்கை உயர் ஸ்தானிகர் மொரகொட மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




