ஐஎல்ஓவிடம் முறையிட்டுள்ள இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள்
இலங்கை மின்சாரசபையை நான்கு நிறுவனங்களாக பிரிக்கும் செயற்பாடு தொடர்பாக, மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓவிடம் முறையிட்டுள்ளன.
சந்திப்பு
இந்த நிலையில் ஐஎல்ஓ அதிகாரிகளுக்கும், மின்சாரசபை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, சபையின் சீர்திருத்த செயல்முறை மேற்கொள்ளப்படும் விதம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் தமது முறைப்பாடுகளை முன்வைத்தன.

சீர்திருத்த செயற்பாடு
குறித்த சீர்திருத்த செயற்பாடுகளில் தொழிலாளர் தொடர்பான நிபுணர்களோ அல்லது ஆலோசகர்களோ இல்லை என்றும், சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம், தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் முறைப்பாட்டை அடுத்து, இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் தலையிட வேண்டும் என்று, ஐஎல்ஓ கோரியுள்ளதாக, மின்சார சபை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |