நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மின்சக்தி அமைச்சர்
புதிய இணைப்பு
மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையை அமைச்சு ஏற்றுக் கொள்வதாகவும், இதன்படி மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நேற்று(17) நள்ளிரவு 12:00 மணி முதல் குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக ஹோட்டல் துறையினரும், தொழிலதிபர்களும் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க குறைப்பு மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் நிச்சயம் கவனத்திற் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி(Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிச்சயம் கருத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்குள் குறையும் மின் கட்டணம்
படிப்படியாக மின் கட்டணத்தை குறைத்து எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் 30 சதவீத மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் இதுதொடர்பான தீர்மானம் சம்பந்தப்பட்ட அமைச்சினால் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
