தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் தேர்தலுக்கு செல்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினை முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் இது தொடர்பான கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையேல் தீர்வைக் காணுவதற்கு 2048 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டியிருக்கும். இதற்காக தமிழ் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
அதேபோன்று சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் நியாயமான அச்சங்கள் போக்கப்படவேண்டும். அத்துடன் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
