சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய கல்வி நிறுவனம் தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக தொழில் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
குறைந்த வரமானத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கான வாய்ப்பு
ஆங்கிலமொழி மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு மேலதிகமாக தாம் விரும்பிய 2 தொழில்நுட்ப பாடங்களை தெரிவு செய்து, பாடநெறியை மாணவர்கள் தொடரலாம்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகும் வரை நான்கு மாதங்கள் இந்த பாடநெறியை மாணவர்கள் தொடர முடியும் என்பதுடன், பல்கலைக்கழங்களுக்கு தெரிவாகும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களுக்கு பரீட்சை நடத்தி, பொருத்தமான பாடநெறிக்கு தெரிவு செய்யப்படுவர்.
மாணவர்களுக்கேற்ற தொழில் பயிற்சி நெறியை தொடரும் வாய்ப்பும் குறைந்த வருமானம் கொண்ட பிள்ளைகளுக்கு இப்பயிற்சியை தொடரும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |