இலங்கைக்கு பேரிடியாக மாறிய ஈரானின் முடிவு! IMF நிபந்தனைகளால் திணறும் நாடு..
இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. நேற்றையதினம்(21) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 342 ரூபாவாகவும், விற்பனை விலையானது 354 ரூபாவாகவும் இருந்தது.
இந்த தொகையானது 2023 மார்ச் 2 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான உயர்ந்த அமெரிக்க டொலர் மற்றும் மாற்று வீதமாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், ஈரான் - அமெரிக்க யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து இலங்கை இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்பதை எதிர்வுகூறி பல நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் விளைவே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின்பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
ஹோர்மூஸ் நீரிணையின் முடக்கம் காரணமாக கப்பல்கள் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தேயிலையை ஈரான் மட்டுமன்றி பிராந்திய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
மேலும் அடுத்த மார்ச் மாதம் வரை ஐஎம்எப்பின் நிபந்தனைகளை மீற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
இலங்கையில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு ஐஎம்எப் தீர்வினை கொடுக்கவில்லை.ஐஎம்எப்பிலிருந்து வெளியேற முடியாத நிலையில் இலங்கை உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...