இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியின் கணிப்பு
இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரம் 2023 இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் 2022 - 2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், குறிப்பாக தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |