கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் விருந்து: துறைமுக அதிகாரசபை விளக்கம்
கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கு பெருந்தொகை செலவில் கப்பலில் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வெளியான செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை துறைமுக அதிகாரசபை விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
அபிவிருத்தித் திட்டங்கள்
கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கமான கப்பல் பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்ததாக துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் பெருந்தொகை பணத்தை செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை விளக்கமளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
