தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Jera May 09, 2022 03:50 AM GMT
Report
115 Shares
Courtesy: ஜெரா

‘கோட்டாகோகம’ போராட்டங்களில் தமிழர்கள் கலந்துகொள்வதில் ஆர்வம்காட்டவில்லை. அதற்காக சிங்களவர்கள் முன்வைக்கும் போராட்டக் கோசங்களின் பாதிப்புத் தமிழர்களுக்கு இல்லை என்று பொருள்கொள்ள முடியாது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் தெற்கு எதிர்கொள்ளும் அதே பாதிப்புகளைத் தமிழர்களும் எதிர்கொள்கின்றனர். ஆயினும் இந்தப் பாதிப்புக்களைத் தெற்கின் அளவிற்குத் தமிழர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமைக்குக் காரணம், “எல்லாம் பழகிவிட்டது” என்ற மனநிலைதான். இந்த மனநிலையை சிங்கள ஆட்சியாளர்களே உருவாக்கிவிட்டனர். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது போர்க்கால பொருளாதார தடைபோன்றதல்ல.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

திருப்புமுனையை நோக்கி இலங்கை அரசியல் களம்! 1953 வெகுஜன எழுச்சியும் 2022 போராட்டமும் 

போர்க்காலத் தடைகளை உடைத்த தமிழர்கள்

போர்க்காலத்தில் இலங்கை அரசினால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையில் மருந்துப் பொருட்கள், பற்றரி, எரிபொருள், சவர்க்காரம் போன்றனவே முதன்மையிடத்தைப் பிடித்திருந்தன. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த சனத்தொகையும், வாழ்க்கை முறைமையும் இந்தத் தடைகளை சமாளித்து வாழும் பக்குவத்தை அளித்திருந்தது.

மக்கள் நலனில் மட்டும் கரிசனையுடைய ஆளுந்தரப்பாக செயற்பட்ட புலிகள் இயக்கமானது, விவசாயம், சிக்கன வாழ்வியல் முறைமைகள் போன்றவற்றை கட்டமைப்பதில் அதிக அக்கறையெடுத்தது. இதற்கு உதாரணமாக சிலவற்றை பின்வறுமாறு நோக்கலாம்.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

பொருளாதாரத் தடை காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தெற்கிலிருந்து அரிசி, கோதுமை மா அனுப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது உணவுப் பஞ்சம் ஏற்படும் என அச்சுறுத்தப்பட்டபோதிலும் அது இடம்பெறவில்லை. கிடைத்த அத்தனை போகங்களிலும் விவசாயிகள் நெல் விளைவித்தலில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நெல் விதைப்பது இரண்டு பிரதான போகங்களே ஆயினும், பொருளாதாரத் தடை காலப்பகுதியில், வன்னியில் மூன்று போகங்கள் கூட நெல் உற்பத்தி செய்யப்பட்டன. முத்தையன்கட்டு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், கள்ளியடி, கணுக்கேணி பக்கங்களில் இதற்குப் பல அனுபவக் கதைகள் உண்டு. இங்கிருந்த குளங்களை விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவினரின் உதவியோடு மக்களும் இணைந்து புனரமைத்து நீர்நிலைகளைக் காப்பாற்றினர்.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

எனவே வரப்புயர நெல்லுயர்ந்தது. அரசி விலை 12 ரூபாய்க்கு மேற்செல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. விவசாயிகள் அல்லாத குடும்பத்தினர் கூலி வேலைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு சம்பளத்திற்குப் பதிலாக நெல் வழங்கப்பட்டது. பச்சையரிசி கஞ்சியும், சுட்ட சூடைக் கருவாட்டும் அனேக வீடுகளில் காலை உணவாக இருந்தது. மதியம் அதே சோற்றில் முத்தையன்கட்டு குளத்திலோ, தண்ணிமுறிப்பு குளத்திலோ பிடிக்கப்பட்ட யப்பான் மீன் கறி அருமருந்தான உணவாக இருந்தது.

கொஞ்சம் வசதியானவர்கள் கடல் உணவைத் தாராளமாகப் பெற்றுக்கொண்டனர். ஏனெனில் ஒரு கிலோ சூடை மீனின் விலை இரண்டு ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை சந்தையில் கிடைத்தது. எனவே உணவுக்குப் பஞ்சமிருக்கவில்லை. தமிழர்கள் பசி தாங்காது தங்களிடம் சரணடைவர் என அரசு போட்ட பொறி புஷ்வாணமானது.

பசளை, உரம் இல்லாது விளைச்சல் எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பானது. அதற்கும் ஒரு மாற்று இருந்தது. வேம்பிலிருந்து விழும் பழங்களை பொறுக்கி, அதிலிருந்து விதைகளைப் பெற்று அரைத்து மேலும் சில இயற்கை நோயளிப்பு விதைகளை சேர்த்து ஒரு வித கரைசலை பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியிருந்தது. அது நெற்பயிர்களில் ஏற்படும் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தியது.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

அதேபோல வேப்பம் இலை, வாழை தடல் போன்றவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட உரம் 'பயிரமுது' என்ற பெயரோடு கடைகளில் கிடைத்தது. இயற்கைக்கு மனங்கோணாமல் பார்த்துக்கொண்டால், அது நம்மை சரியாகக் கவனித்துக்கொள்ளும் என்பதற்கு இணங்க, மழைப்பொழிவிலும் பஞ்சம் ஏற்படவில்லை.

எரிபொருளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடையையும் மக்கள் இலகுவாகக் கடந்தனர். அனைவர் வீடுகளிலும் சைக்கிள்கள் இருந்தன. வடக்கு, கிழக்கின் எப்பாகத்திற்கும் குடும்பம் குடும்பமாக சைக்கிளில் பயணித்தனர். இடப்பெயர்வுகள் தொடக்கம் இல்லற வாழ்வின் தொடக்கம் வரையில் சைக்கிள் பிரதான உலாவூர்தியாக வலம் வந்தது. வசதி படைத்தவர்கள் வீடுகளில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் இருந்தன. அவற்றை பெற்றோலுக்குப் பதில் மண்ணெண்னெயில் இயங்குவதற்கான பொறிமுறையையும் தமிழர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

இன்று வழக்கிலிருந்து அருகிவிட்ட 'சூப்பி' எனப்பட்ட சிறு குப்பி பெற்றோலை கார்பரேட்டருக்குள் அனுப்பி மோட்டார் வாகனத்தை 'ஸ்ராட்' செய்துவிட்டு, மண்ணெண்ணெயில் ஓடவிட்டனர். விவசாய நடவடிக்கைகளின்போது நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு கார்பரேற்றருக்கு சற்றுப் புகை காட்டி 'ஸ்ராட்' செய்தனர். உடல் உழைப்பு பலமாக இருந்தமையினால் நோய் நொடிகள் தொற்றுவது குறைவாக இருந்தது.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

சில 'சீசன்களில்' மலேரியா, கொலரா போன்ற நோய்கள் பரவியபோது வேப்பம் பட்டையை அவித்து ஒரு 'ரம்ளர்' பருகினர். அதனோடு பறந்த காய்ச்சல் பல வருடங்களுக்கு அவ்வுடம்பை தொட்டும்பார்க்கவில்லை என்பது நாடறிந்த செய்தி. ஆள்பவர்களின் நெஞ்சுரமும், உழைப்பும் தமிழ் மக்களை எத்தடையிலும் நிமிர்த்தியே வைத்திருந்து.

பொருளாதாரத் தடையுடன் கூடிய வாழ்க்கையானது, தரப்பாள் கொட்டில்களிலும், பாடசாலைகளிலும், நலன்புரி நிலையங்களிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும், கிடுகு வீடுகளிலுமாயினும் அங்கெல்லாம் தேடிய தேட்டம் ஒன்றொன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருந்தது. தேவைகள் சுருங்கசுருங்க சேமிக்கப்படுதல் மிகையாகிக்கொண்டேபோனது. அந்தக் சேமிப்பு தமிழ் மக்களின் வாழ்க்கையை பதுங்குகுழிகளுக்குள்ளும் மகிழ்ச்சியாகக் கொண்டுநடத்தப் போதுமானதாக இருந்தது.

ஒப்பந்த காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்

ஆனால் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலமை அப்படியானதல்ல. ரணில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையினால் பாதைகள் திறக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து குவிந்தன.

இதனை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே பாலகுமாரன் அவர்கள், “மக்கள் தாம் போர்க்காலத்தில் இரத்தமும் தசையுமாக சேமித்த அத்தனை சொத்துக்களையும் கொடுத்து, சீமெந்தையும், இரும்பையும் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கின்றனர். இனியொரு போர் வருமானால் இவையனைத்தும் அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீளவும் பூச்சிய நிலையிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

அந்த ஆருடம் 2009இல் அப்படியே நடந்தது. தமிழர்களின் பொருளாதார ஆன்மா இலங்கை அரசினால் அழிக்கப்பட்டது. ஒருவேளை உணவிற்கு கையேந்தும் நிலையில்தான் தமிழர்கள் வந்துநின்றனர். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை புலம்பெயர்தமிழர்கள்தான். அந்த நம்பிக்கை வீண்போகவுமில்லை. அரசின் எத்தனையோ கண்காணிப்புக்கள், கெடுபிடிகள், விசாரணைகளுக்கு மத்தியிலும் தம் உழைப்பில் ஒரு பகுதியை தாயக மக்களின் துயர்துடைக்க ஒதுக்கினர்.

தாயகநிலம் பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதில் அயராது உழைத்தனர். வாழ்வாதார உதவிகள் வாழ்விழந்த பலருக்கும் வாழ்வுகொடுத்திருக்கிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றியளித்திருக்கிறது என்பது குறித்த மீளாய்வுகள் மிக முக்கியமானது. அதேபோல புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவினர்களின் பொருளாதார மேம்பாடு, புதிய முதலீடுகள் போன்றனவும், தமிழர் பகுதிகளை தெற்கிலிருந்து தனித்துவமாகப் பிரித்துக்காட்டுகின்றது.

வசதியான – வண்ணமயமான வாழ்க்கையை வாழும் பெருந்தொகுதி மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் உருவாகியிருக்கின்றனர். இந்நிலையில்தான், தேவைகள் முதலையின் வாயைப்போல பிளந்திருக்கும் யுகமொன்றினுள் தமிழர்கள் தம்மை வாழப் பழக்கப்படுத்தியிருக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களது நிதியளிப்பும் இதற்கு ஒரு காரணமாகும்.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

போர் நிறைவுற்ற கையுடன், இலங்கை வாழ் சமூகங்களைப் பற்றி, அதன் பொருளாதாரப் பண்பாடு பற்றி எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாது கடன்களின் மேல் கட்டியெழுப்பப்பட்ட நவீன வாழ்க்கை முறையானது மக்களை சோம்பேறிகளாக மாற்றியது. வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பான வாழ்க்கை முறையை அனுபவிக்கத் தயாரான மக்களின் வருமானமோ, கடன்களை நம்பியும், பிறரின் உழைப்பை நம்பியுமே இருந்தது.

விறகு அடுப்புக்குப் பதில் எரிவாயு சாதாரணமாகியது. சைக்கிள்களில் பயணிப்பது அநாகரிகமானது என்ற நிலை உருவாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சொகுசு வாகனங்கள் அத்தியாவசிய தேவையாக்கப்பட்டது. ஆளுக்கொரு அன்ரெய்ட் தொலைபேசி அத்தியாவசியம் என்ற நிலை உருவாகியது.

உள்நாட்டு – வெளிநாட்டு நிதிநிறுவனங்கள் மக்களை நாகரிக வலயத்திற்குள் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மொத்த சேமிப்பையும் கடனாக மாற்றின. விரிவான ஆய்வுக்குரிய இந்த விடயமானது தெற்கிற்கு மட்டும் பொருத்தமானதல்ல. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்துக் கிராமங்களுக்கும் பொருத்தமானவை. அனைத்து நபர்களுக்கும் பொருத்தமானவை.

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

பொருளியலாளர்களின் தேவை

எனவேதான், இந்தப் பொருளாதாரப் பேரிடர் சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல. தமிழர்களுக்கும் உரியது. தடையை உடைத்து மேல்வரக்கூடிய தரப்பொன்றை தமிழர்கள் தற்போது கொண்டிருக்கவுமில்லை. அத்தியாவசியமற்ற தேவைகள் அவசியமாக்கப்பட்டிருக்கின்ற இன்றையநிலையில், இந்தப் பொருளாதார சரிவை, போர்க்கால பொருளாதாரத் தடையைப் போல வெல்வோம் எனக் கூறிக்கொண்டிருக்க முடியாது.

தெற்கின் பொருளாதார – அரசியல் நெருக்கடிகளில் ஆர்வம்காட்டும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், தமிழர்களின் பொருளாதார மேம்பாடு குறித்து கரிசனைகாட்ட வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்போடு சுயபொருளாதார உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய செயற்றிட்டங்களை உருவாக்க முனைப்புக்காட்டவேண்டும்.

பொருளியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் பொருளாதார பேரிடர் குறித்த விழிப்புணர்வை மக்கள்மயப்படுத்த வேண்டும். இவையெதும் நடக்காவிடின், தெற்கைவிட வடக்கு, கிழக்கு பகுதிகள் மிக மோசமான பொருளார அழிவை மீண்டும் சந்திக்கும்.  

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் | Sri Lanka Economic Crisis War Tamil Peoples

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US