இலங்கையில் அதிகரிக்கும் விலை - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
இலங்கையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு இலங்கை தேசிய நிர்மாண சங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
சீமெந்து விலை அதிகரிப்பால் நிர்மாணத்துறையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உள்நாட்டு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 400 ரூபாவினாலும் வெளிநாட்டு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 500 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
தற்போது உள்நாட்டு சீமெந்து மூட்டை 2750 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் வெளிநாட்டு சீமெந்து மூட்டை 2850 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலைமையால் நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
அரச நிர்மாணிப்பு பணிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நிர்மாணிப்புகளில் ஈடுபட்டுள்ள மக்களிடம் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
100 லட்சம் ரூபாய்க்கு நிர்மாணிப்பு செய்ய திட்டமிட்டிருந்தீர்கள் என்றால் 250 லட்சம் ரூபாவிற்கேனும் செய்ய முடியாத நிலைமை உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் 80 வீதமான நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
