இலங்கையில் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாய நிலை(Video)
எதிர்காலம் மிகவும் ஆபத்தானது, இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு போன்றவற்றால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றது.
இது தொடர்பில் எமது குழுவினர் பொது மக்களின் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
பொதுமக்களின் கருத்துக்கள்...
வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கை மக்கள்
நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசை என்று தினம் தினம் வரிசைகள் அதிகரித்து வருகின்றன.
அத்துடன், விலை உயர்வு, பற்றாக்குறை என்ற காரணங்களினால் உயிர்கள் பறிபோகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மருந்து தட்டுப்பாடு காரணமாக உயிர்கள் பறிபோகும் அபாய கட்டத்திலேயே இலங்கை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனால், அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்புக்களும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதுடன், அராசாங்கத்திற்கு எதிராக கடுமையான கோஷங்களை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர்.