அரசாங்கத்தின் இழுத்தடிப்பால் தொழில் வாய்ப்பை இழந்துள்ள மக்கள்-செய்திகளின் தொகுப்பு
அரச வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் செலுத்த தவறியதாக இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபா தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
மேலும், குறித்த நிதி தாமதத்தினால் 4000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது தொழில் வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளது.
மேலும்,வரவு செலவு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை விட அரச அதிகாரிகள் தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு அதிக நிதியை செலவிட்டமையே இதற்கு காரணம்.”என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan