விடுதலைப்புலிகளை திட்டியவர்களுக்கு நேர்ந்த கதி! படு முட்டாளால் திண்டாடும் நாட்டு மக்கள் (Video)
இப்போது ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அரசியல்வாதிகளாக இருக்கலாம் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் விடுதலைப்புலிகளையும், தமிழ் போராளிகளையும் திட்டித்தீர்த்தவர்கள். தமிழர்களுக்கு நியாயம் வழங்கமறுத்த காரணத்தினால்தான் இத்தனையும் நிகழ்ந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களுக்கு உரித்தான நியாயமான விடயங்களை மறுத்த காரணத்தினால்தான் தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது. அதனால்தான் வேறுவழியில்லாமல், ஜனநாயக ரீதியான வழிமுறைகள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ் போராளிகள் ஆயுதம் தூக்க தள்ளப்பட்டார்கள். அதனால்தான் யுத்தம் நடந்தது. யுத்தம் நடத்த காரணத்தினால்தான் நாடு அதளபாதாளத்தில் விழ்ந்தது. அது மட்டும்மல்ல யுத்த வெற்றி காரணமாகத்தான் துட்டகைமுனு மறு அவதாரம் என்ற ஒரு பட்டத்தை தானாகவே கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பெற்றார்கள்.
ஆகவேதான் நாடு இந்த நிலைக்கு வந்திருக்கின்றது. அதற்கு காரணம் தமிழர்களுக்கு நியாயம் வழங்க மறுத்ததுதான். ஒரு பிரதேச சபை தலைவராக கூட ஒரு அனுபவம் இல்லாத ஒரு நபரை ஒரு அடி முட்டாளை நாட்டு ஜனாதிபதி ஆகிவிட்டு இப்போது திண்டாடுகின்றீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



