கோட்டாபய - மகிந்தவுக்கு இடையில் கடும் மோதல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை குறைத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது அதிகாரங்களை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் ஆளும் தரப்பிற்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் மற்றும் இம்முறை அவ்வாறு செய்யக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல தேவையற்ற நெருக்கடிகளுக்கு நிறைவேற்று அதிகாரங்களே பிரதான காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் கருதுகின்றனர். எனினும், நிறைவேற்று அதிகாரங்கள் பல பிரச்சினைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச தரப்பு கருதுகின்றது.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கும் பிரேரணையை இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தரப்பு முன்வைத்து, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியை அதிகரிக்க விடாமல் தினேஷ் குணவர்தன, ரமேஷ் பத்திரன உள்ளிட்ட அரச அதிகாரிகள் தீர்க்க முயற்சித்து வருவதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



