இலங்கையின் பரிதாப நிலை - நாட்டுக்குள்ளே பல பில்லியன் சிக்கல்
தனியார் மின்சாரம் வழங்குபவர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொது, தனியார் வங்கிகளுக்கு அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாய் கடன் செலுத்த வேண்டி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கிய வெளி மின்சார விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பில்லியன் ரூபாவும் ஒப்பந்தக்காரர்களுக்கு சுமார் 300 பில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக தங்களுக்கு கிடைத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 600 பில்லியன் தொகையை வங்கித் துறைக்கே செலுத்த வேண்டும். கடந்த கொரோனா காலத்தில் ஹோட்டல் துறை மற்றும் பல துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைகளுக்காக அந்த வங்கிகள் அர்ப்பணித்த தொகை பின்னர் அந்தந்த வங்கிகளில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகை சுமார் 600 பில்லியன் ரூபாவாகும்.
இவையனைத்தும் இணைந்தால் இந்த மூன்று துறைகளுக்கும் அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகை 1000 பில்லியன் ரூபாய்
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
