கடனைப் பெறுவதற்கான டிசம்பர் மாத எதிர்பார்ப்பை இலங்கை இழக்கும்! இந்திய செய்தித்தாளின் தகவல்
சர்வதேச நாணய நிதியத்திடம்; இருந்து கடனைப் பெறுவதற்கான டிசம்பர் மாத எதிர்பார்ப்பை இலங்கை இழக்கும் என்று இந்திய செய்தித்தாளான த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முக்கிய இருதரப்பு கடனாளியான சீனா 20வது கட்சி மாநாட்டில் ஈடுபட்டமை காரணமாக கொழும்புடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டமையும் இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே இலங்கை பெரும் அரசியல் கொந்தளிப்பை நோக்கிச் செல்கிறது என்றும் ஹந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் மிகவும் இருண்டதாக உள்ளது
வோஷிங்டனை தளமாகக் கொண்ட நிதி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எதிர்வரும் டிசம்பரில் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை இலங்கை இழக்கக்கூடும் இதன் காரணமாக அந்த நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை எட்டு சம தவணைகளாக பெறுவதற்கு 2023 மார்ச் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனாளிகளான இந்தியாவும் ஜப்பானும் ஏற்கனவே கொழும்புடன் கடன் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான உரையாடலை ஆரம்பித்துள்ளன.
எனினும் பீய்ஜிங் 20வது தேசியக் கட்சி காங்கிரஸில் ஈடுபட்டதால், இன்னும் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் மிகவும்
இருண்டதாக உள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.