கொழும்பில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்....! மகிந்தவுக்காக களமிறங்கிய குண்டர்கள் வழங்கிய வாக்குமூலம்
கொழும்பு, காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்காக சிறைக் கைதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக கூடாதென நேற்று காலை அலரி மாளிகைக்கு 200 பேருந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டாரங்களை உடைத்து வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் சிறைக்கைதிகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்களை தேடி கண்டுபிடித்த இளைஞர்கள் அவர்களை கட்டி வைத்தனர். இதன் போது தாம் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு வட்டரெக்க சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
சிறையில் இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக எங்களை வெளியே அழைத்து வருவார்கள். இன்று சிறையதிகாரி ராமநாயக்க என்பவரே எங்களை அழைத்து வந்தார். அழைத்து வந்த அதிகாரிகளும் பேருந்தில் தான் உள்ளார். நாங்கள் தடுத்து வைக்க்பபட்டிருக்கும் சிறைக்கைதிகள்” என அந்த கைதி குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam