மகிந்தவை மறைமுகமாக எச்சரித்த ஜனாதிபதி கோட்டபாய......
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து சகோதரர்களுக்கு இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலிமுகத்திடலில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் இது உறுதியாகி உள்ளது.
தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று காலை கூடிய ஆதரவாளர்கள், மகிந்தவை சந்தித்து பேசியிருந்தனர். கூட்டம் நிறைவடைந்த பின்னர் வெளியில் வந்த ஆதரவாளர்கள் பெரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதும், மிகவும் சாதாரணமாக காலிமுகத்திடலை நெருங்கிய குண்டர்கள், அங்குள்ளவர்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் சற்று தணிந்திருந்த நிலையில், மகிந்த ராஜபக்சவும் தனது பங்கிற்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இன்றையதினம் பிரதமர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் காடையர்களை தூண்டி விட்டு தனது பதவியை தக்க வைக்க மகிந்த திட்டமிட்டுள்ளதாக பலரும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியின் எச்சரிக்கையும் மகிந்தவுக்கு விடுக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மகிந்தவுக்கு ஆதரவாக இன்று காலை பெருமளவு மக்களை அலரி மாளிகைக்கு முன்னாள் ஒன்றிணைக்கப் போவதாக ராஜபக்ஷர்களின் உறவினரான உதயங்க வீரங்க சூளுரை விடுத்திருந்தார்.
அதற்கிணங்க பல பேருந்துகளில் ஏற்பட்ட மக்கள் இன்று காலை கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த கும்பலை பாரிய வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபயவின் கடும் எச்சரிக்கையை அடுத்து சற்று முன்னர் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam