சிங்களவர்களையும் அடக்கி வைக்கும் கோட்டாபயவின் நிறைவேற்று அதிகாரம்
பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என அரசாங்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ், இராணுவம் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
இதுவரை காலமும் தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அவசரகால சட்டம் இன்று சிங்களவர்களை பாதிக்க தொடங்கியுள்ளது.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் இன்றும் காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
