கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொள்ளுப்பிட்டி அலாி மாளிகைக்கு முன்னார் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடைபாதை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.
இதேவேளை குறித்த உத்தரவினை அடுத்து அலரி மாளிகை வளாக பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் காலிமுகத்திடலை நோக்கி சென்று அங்கு நடுவீதியில் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், இன்னொரு பிரிவினர் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
