கோட்டாபயவின் ஏமாற்றத்தால் கடும் வேதனையில் முன்னாள் அமைச்சர்
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பெரும் மன வேதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு இம்முறை அமைச்சரவை அமைச்சு பதவி வழங்காமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இது தொடர்பில் அவர் தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் சிலருடன் கடந்த நாட்களாக கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
“இயற்கை உரம் என்பது ஜனாதிபதியின் மகன். அதனை செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இறுதியில் நான் தான் எனது அரசியல் குறித்தும் சிந்திக்காமல் அதனை செய்வதற்கு முன்வந்தேன்.
ஜனாதிபதிக்காக ஜனாதிபதியின் இயற்கை உரத்திற்காக எந்தளவு தகாத வார்த்தைகளால் மக்களிடம் திட்டு வாங்கியுள்ளேன். எனது உருவ பொம்மைகளை எரித்தார்கள். எனினும் இறுதி வரை அவருக்காக நின்றேன்.
இவ்வளவு செய்தும் ஜனாதிபதி இறுதியில் ஏமாற்றி விட்டார் என அவர் புலம்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.