இலங்கைக்கு நிதி நட்டத்தை ஏற்படுத்திய சீன நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தேசிய கணக்காய்வாளர் அலுவலகம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Government of China
By Sivaa Mayuri Sep 04, 2022 09:36 PM GMT
Report

இலங்கை அரசுக்கு நிதி நட்டத்தை ஏற்படுத்திய சீன நிறுவனமான கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech) நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படாத கரிம உரத்துக்காக 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 1.38 பில்லியன்) வழங்கப்பட்டமை தொடர்பில், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அலுவலகம், விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்றின் மூலமாக பரிந்துரைத்துள்ளது.

சீன நிறுவனத்திடம் இழப்பீடு கோர வேண்டும்

இலங்கைக்கு நிதி நட்டத்தை ஏற்படுத்திய சீன நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்:  தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் | Sri Lanka Economic Crisis Chinese Firm

அதேநேரம் அழிவை ஏற்படுத்தும் பக்டீரியாவைக் கொண்ட கிருமி நீக்கம் செய்யப்படாத உரத்தை இறக்க முயன்றதற்காக கூறப்படும் சீன நிறுவனத்திடம் இழப்பீடு கோருமாறும், அந்த கணக்காய்வாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சேதன உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, செயற்படாததன் காரணமாக இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

96,000 மெட்ரிக் தொன் சேதன உரங்கள் கொள்முதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சீன நிறுவனத்தின் உரங்களின் மாதிரிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. அவை தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டிருப்பதாக தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை தெரிவித்திருந்தது.

சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

இந்த சூழ்நிலையில், இறக்குமதிக்குத் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, விவசாய அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய உர இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சீனாவின் உர வழங்குநரான, கிங்டாவோ சீவின் பயோடெக்(Qingdao Seawin Biotech) நிறுவனம், கடந்த 2021 செப்டம்பர் 23 அன்று, 20,550 மெட்ரிக் தொன் உரத்தை கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பியது.

எனினும் அவை தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படாததால், அதனை இலங்கையில் இறக்க முடியாமல் போனது.

இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், குறித்த உரத்தை இறக்குமதி செய்த இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி என்பன பணம் வழங்க மறுத்ததுடன், கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து கொடுப்பனவை நிறுத்துவதற்கான உத்தரவையும் பெற்றன.

6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 

இலங்கைக்கு நிதி நட்டத்தை ஏற்படுத்திய சீன நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்:  தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் | Sri Lanka Economic Crisis Chinese Firm

இதனையடுத்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர சர்ச்சை உருவானது. சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண, அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கமைய, கப்பலில் உள்ள உரத்தில் 75% இருப்புக்கான கட்டணமாக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1,382 மில்லியன் ரூபா) சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டது.

அத்துடன் தேவையான கலவை மற்றும் தரம் கொண்ட உரங்களை அதே நிபந்தனைகளின்படி மீண்டும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்புடைய வழக்கும் மீளப் பெறப்பட்டது.

எனினும், இது வரையில், இந்த நாட்டுக்கும் எதிர்பார்த்த தரமான உரம் எதுவும் சீனா நிறுவனத்தினால் அனுப்பப்படவில்லை.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, நாணயக்கடிதம் மற்றும் உத்தரவாதப் பிணை (Performance bond)என்பவற்றின் செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டு செல்லுபடியாகும் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், அவை முறையே கடந்த மார்ச் 12 மற்றும் மார்ச் 24ஆகிய திகதிகளில் காலாவதியாகி விட்டன. இதனால் தரப்படுத்தப்பட்ட உரங்கள் வழங்கப்படாமையால் குறித்த நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை, மீளப்பெறும் திறனை, இலங்கை இழந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உரத்துக்காக செலுத்தும் தொகை முழுவதும் அரசாங்கத்திற்கு நஷ்டமாக மாறியுள்ளது.

இதன்படி, அது தொடர்பான பத்திரங்களை காலாவதியாகும் முன் பணமாக்குதல் அல்லது அவற்றின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் முற்பண செலுத்தலின்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி நிதியை விடுவிக்காதமை ஆகியவற்றின் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வசூலிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைந்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US