இலங்கையில் வெகுவாக அதிகரித்துள்ள எரிபொருள் விலை! மக்களை நினைத்து கவலை கொள்ளும் மைத்திரி
எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமகால அரசாங்கம் தொடர்பில் நான் ஒன்றும் கூற முடியாது. நேரடியாக தொடர்புடையவர்கள் சாதாரண மக்கள் என்பதால் அரசாங்கம் தொடர்பில் மக்களிடம் தான் அபிப்ராயம் கேட்க வேண்டும்.
மேலும், அரசாங்கம் பொறுப்பேற்று 7, 8 மாதங்களே கடந்துள்ள நிலையில், தற்போது எதையும் கூறுவதென்பது கடினமானது. ஒரு வருடம் கடந்த பின்னர் அவர்கள் குறித்து தெரிவிக்கலாம்.
தற்போது, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது. பொதுமக்கள் மிகவும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சாப்பிட முடியாத நிலையில் கூட மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




