இலங்கை மக்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் வைப்புச் செய்வதா..! சொத்துக்களை வாங்குவதா..! பேராசிரியர் தகவல்
இலங்கையின் வங்கித் துறையானது அதிகளவு அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வைப்புக்களுக்கு மெய் வட்டி என்பது உண்மையில் எதிர் கணியமாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருட ஆரம்பத்தில் 100 ரூபாவை வங்கிகளில் வைப்பு செய்வதாக இருந்தால், வருட இறுதியில் 25 ரூபா வருமானமாக கிடைக்கும். ஆனால், அதே காலப்பகுதியில் 100ரூபா 68.9 ரூபா என்ற பெறுமதியை இழந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கை மக்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் வைப்புச் செய்ய விரும்புவார்களா? அல்லது சொத்துக்களை வாங்க விரும்புவார்களா, என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிநிலையில் இலங்கையில் வங்கிகளின் தற்போதைய நிலை தொடர்பிலும், எதிர்காலத்தில் வங்கித்துறையின் சவால்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கின்றார் கலாநிதி. கணேசமூர்த்தி அதனை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்,