இலங்கைக்கான 30 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க தயாராகும் ஜப்பான்
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க ஜப்பான் உதவுள்ளதாக, டோக்கியோவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. அதில் முக்கியமானதாக, கடன் வழங்குநர்களின் மறுசீரமைப்பு உடன்பாடாகும்.
கடன் மறுசீரமைப்பு
இந்நிலையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவாக இருக்கும் என்று தூதுவர் ஹிடேகி மிசுகோஷி கூறியுள்ளார்.
அத்துடன் சீனா மற்றும் இந்தியா உட்பட பிற கடன் வழங்கும் நாடுகளுடன் ஜப்பான் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க விரும்புகிறது என்றும் மிசுகோஷி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் ஆதரவு
அரசாங்க தரவுகளின்படி இலங்கையின் மொத்த இருதரப்புக் கடனில் சுமார் 3.5 பில்லியன் டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளது.
இந்தநிலையில் கடன் பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் போதிலும் இலங்கையின் பொருளாதாரம் மீண்ட பின்னரே பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மிசுகோஷி தெரிவித்தார்.