இலங்கைக்கு பெருந்தொகை யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு மக்களைப் பாதிக்கும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
மக்களின் உடனடித் தேவைகளான உணவு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்றவற்றுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்கள் சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி முகாமைத்துவ ஆணையாளர் ஜெனஸ் லெனாசிக் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்
இந்த புதிய மனிதாபிமான நிதியத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
