இலங்கை மீண்டும் மீண்டும் திவாலாகும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரும் வாதிடுவதைப் போன்று சிம்பாப்வேயைப் போல இருக்காது. ஆனால் நிலைமை பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும் என்று சிங்கள கல்வியியலாளரான கலாநிதி ரொஹான் பெத்தியகொட தெரிவித்துள்ளார்.
ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48வது பட்டமளிப்பு நிகழ்வின்போது அவர் இதனை குறிப்பிட்டார். 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜென்டினா உலகின் 15வது பணக்கார நாடாக இருந்தது. .
பணக்கார நாடுகள்
சராசரியாக, ஆர்ஜென்டினியர்கள் இத்தாலியர்கள், பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் மக்களை விட பணக்காரர்களாக இருந்தனர். இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் சித்தாந்தத்தில் பொது அறிவு இல்லாமையே என்று ரொஹான் பெத்தியகொட குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளில், அர்ஜென்டினா ஒரு முறை அல்ல, ஒன்பது முறை திவால் என்று அறிவித்தது. எதிர்வரும் காலங்களில் இலங்கை மீண்டும் மீண்டும் திவாலாகிவிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அவல நிலை
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வது எளிதல்ல. ஓரிரு வருடங்களில்
முடிந்துவிடப் போவதில்லை. இதற்கு பத்து அல்லது இருபது வருடங்கள் அல்லது ஒரு
தலைமுறை ஆகலாம் என்றும் கலாநிதி ரொஹான் பெத்தியகொட குறிப்பிட்டார்.